அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை படித்தவர்கள், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும், விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை எளிதில் பெறுவதற்கும் உதவிகரமாக இருக்கும் நெட் எனப்படும் (National Eligibility Test) தேர்வு குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

எம்.எஸ்சி. மற்றும் அதற்கு இணையான படிப்புகள், பி.எஸ். -எம்.எஸ். படிப்புகள், பி.இ, பி.டெக் மற்றும் பி.பார்மா/ எம்.பி.பி.எஸ். படிப்புகளை குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த நெட் தேர்வை எழுத தகுதியுள்ளவர்கள். Junior Research Fellowship(NET) தேர்வு எழுத விரும்புபவர்கள் 28 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விரிவுரையாளருக்கான (NET) தேர்வு எழுதுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்வை எழுத பொதுப்பிரிவினர் ரூ.1000-ம், ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் ரூ.250-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த தேர்வை எழுத விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இம்மாதம் 25ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான ஹார்டு காபி நகல் செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்து மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள www.csirhrdg.res.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

English Summary : National Eligibility Test exams announced for research students. Minimum 28 years old candidate can apply for Junior Research Fellowship(NET).