கடந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட மிக அளவு பெய்ததால் சென்னை உள்பட பல நகரங்கள் வெள்ளத்தால் தத்தளித்த நிலையில் இந்த ஆண்டும் வழக்கமான அளவை விட சற்று கூடுதலாக பருவமழை பெய்யும் என தனியார் வானிலை மையம் ஒன்று அறிவித்துள்ளது..
இதுகுறித்து வானிலை இடர் நிர்வாக சேவை நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் (காலநிலை அறிவியல்) காந்தி பிரசாத் அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “எங்களுடைய கணிப்புப்படி இந்த ஆண்டு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் வழக்கமான அளவை விட சற்று கூடுதலாக பருவமழை பெய்யும். குறிப்பாக பருவமழை தொடக்க காலமான வரும் ஜூன் மாதம் 25 சதவீதம் வரை கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன் பிறகு சற்று குறையத் தொடங்கினாலும், வழக்கமான அளவுக்கு மழை பெய்யும்.
வடகிழக்கு இந்தியாவைப் பொருத்தவரை இந்த ஆண்டு மழை குறைவாக இருக்கும். பொதுவாக நாடு முழுவதும் நல்ல மழை பெய்தால் வட இந்தியாவில் மழை குறைவாக இருப்பது வழக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த மாத இறுதியில் பருவமழை குறித்த முன்னறிவிப்பை வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது. எல்-நினோ வலு விழந்துவிட்டதால் இந்த ஆண்டு பருவமழை சிறப்பாக இருக்கும் என்று இந்த மையம் சூசகமாக தெரிவித்துள்ளது.
English Summary: Meteorological Department announces that, this Year Monsoon will be little higher.