jaundice2416தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அடுத்த மாதம் அக்னி நட்சத்திரம் வரவுள்ளதால் அந்த சமயத்தில் கோடை வெயில் மிக அதிகமாக இருக்கும். வெயில் காலத்தில்

மாநிலம் முழுவதும் பரவும் ஒரு நோய் மஞ்சள் காமாலை நோய். இதனால் பொதுமக்களில் பலர் பாதிக்கப்படுவதோடு சில உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. கோடையில் பரவும் இந்த நோயில் இருந்து தப்பிக்கும் வழிகள் குறித்து தற்போது பார்ப்போம்.

மஞ்சள் காமாலை நோய் தாக்கியவர்களுக்கு கண்கள் மஞ்சள் நிறமாவதும், சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளியேறுவதும் அறிகுறிகளாக தென்படுகின்றன. கல்லீரல் பாதிப்பால் வயிறு வீக்கம் ஏற்பட்டு, மருத்துவமனைகளில் கல்லீரல் சுரப்பை வைத்துக் கணக்கிடப்படும் எண்ணிக்கைகள் ஏற-இறங்க முடிவில், உயிரிழப்பு மட்டுமே மிஞ்சுகிறது. ஆங்கில மருத்துவ முறைகளில் மஞ்சள் காமாலை நோயை “ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி’ என நான்கு வகைகளில் பிரித்துள்ளனர். ஹெபடைடிஸ் “ஏ’, “பி’ வகைகள் உயிரிழப்பை ஏற்படுத்தாதவை என்றும் “சி’,”டி’ வகைகள் உயிரிழப்புக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளவை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மஞ்சள் காமாலை நோய் தாக்கப்பட்டவர்கள் தண்ணீரை நன்கு காய்ச்சி பின்னர் ஆற வைத்து அருந்தினால், இந்த வகையை முற்றிலுமாகத் தடுத்திட முடியும். மற்ற ஆபத்தான வகைகளில் பெரும்பாலும் பித்தப்பையில் ஏற்படும் அடைப்பு, பித்தப்பையில் இருந்து வெளியே செல்லும் குழாயில் ஏற்படும் அடைப்பும் மஞ்சள் காமாலைக்கான காரணங்கள். பொதுவாக நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது; வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. மஞ்சள் காமாலை வைரஸ் பாதிப்பால் ஏற்படுவது. எனவே, முறையாக மருத்துவரை நாடி, எந்த வகை மஞ்சள்காமாலை என்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையைப் பெறுவதுதான் நல்லது

மேலும் மஞ்சள் காமாலை என்பது நோயல்ல, அது உடலில் ஏற்பட்டுள்ள தொற்றுநோய்களையும், புற்று நோய்களையும் வெளிப்படுத்தும் அறிகுறிதான். கல்லீரல் பாதிப்பால்தான் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மதுப் பழக்கத்தை நிறுத்துவதும், கொழுப்புள்ள உணவுப் பொருள்கள் சாப்பிடுவதை அறவே நிறுத்துவதும்தான் கல்லீரல் பாதிப்பைத் தடுக்க உதவும். ஒருசில மருந்துகள்கூட கல்லீரல் பாதிப்பு என்ற பக்க விளைவையும் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. தானமாகப் பெறும் ரத்தத்தை முறையான சோதனைக்குப் பிறகே ஏற்ற வேண்டும்; பாதுகாப்பற்ற உடலுறவாலும் மஞ்சள் காமாலை பரவ வாய்ப்புள்ளது

மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்க இயற்கை முறையையும் கடைபிடிக்கலாம். வெயில் காலத்தில் கல்லீரலும், மண்ணீரலும் இயல்பாகச் செயல்பட முடியாது. பலவீனம் அடையும். அவற்றை இயல்பாகச் செயல்பட வைக்க வேண்டுமானால், உடல் சூட்டைக் குறைக்க வேண்டும். வெயில் காலத்தில் ஆண்கள் சனி, புதன்கிழமையும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமையும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.

கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, ஆவாரை, சோற்றுக் கற்றாழை இவற்றில் எது கிடைத்தாலும், அரைத்து உடலில் தேய்த்துக் குளிப்பதால் சூடு குறைவதுடன், கல்லீரல் இயல்பாகச் செயல்பட ஏதுவாக இருக்கும். பெரிய நெருஞ்சி இலைகளை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் வைத்திருந்தால், எண்ணெய் போல மாறிவிடும். வழக்கமாகக் குடிப்பதைப் போல குடிக்க முடியாது. விழுங்க வேண்டும். காலை வேளையில் ஒரு டம்ளர் குடிப்பதால், கல்லீரல் செயல்பாடு அதிகரிக்கும். நோய் வந்துவிட்டால், மஞ்சள் காமாலைக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் இல்லை; நாட்டு மருந்துதான் நல்லது. இவற்றில் தயக்கமுள்ளவர்கள் சித்த மருத்துவம், ஹோமியோ மருத்துவத்தையும் நாடலாம்.

Englisgh Summary: What are the ways to escape from jaundice disease in the summer.