10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணையை நேற்று பள்ளி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குனரகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி
12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை விபரம் வருமாறு:
7.12.2015 – தமிழ் முதல் தாள், 8.12.2015 – தமிழ் இரண்டாம் தாள், 9.12.2015 – ஆங்கிலம் முதல் தாள், 10.12.2015 – ஆங்கிலம் இரண்டாம் தாள், 12.12.2015 – வணிகவியல், மனை அறிவியல், புவியியல், 14.12.2015 – கணிதம், மைக்ரோபயாலஜி, விலங்கியல், நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு, விவசாய பயிற்சி, அரசியல் அறிவியல், நர்சிங் (தொழிற்கல்வி), நர்சிங் (ஜெனரல்), அக்கவுண்டன்சி மற்றும் ஆடிட்டிங் (எழுத்து தேர்வு), 16.12.2015 – இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்டு, எலக்ட்ரானிக்ஸ் உபகரணம், டிராட்ஸ்மேன் சிவில், எலக்ட்ரிகல் மெஷினிஸ் மற்றும் அப்ளையன்ஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஆபீஸ் மேனேஜ்மென்ட், 18.12.2015 – வேதியியல், அக்கவுண்டன்சி, ஜெனரல் மெஷினிஸ்ட் தாள்–2, எலக்ட்ரிகல் மெஷினிஸ் மற்றும் அப்ளையன்ஸ் தாள்–2, தொழிற்கல்வி மற்றும் ஆடிட்டிங், 21.12.2015 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம், 22.12.2015 – கம்யூனிகேட்டிவ் இங்கிலிஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், புள்ளியியல் அக்கவுண்டன்சி மற்றும் ஆடிட்டிங் செய்முறை தேர்வு–1, டைப்ரைட்டிங் (தமிழ், ஆங்கிலம்)
பிளஸ்–2 தேர்வு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் காலை 10 மணி முதல் 10.10 மணி வரை வினாத்தாள் வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் பதிவு நம்பரை எழுதுவதற்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. அதன்பின்னர், தேர்வு 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை விபரம் வருமாறு:
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் காலை 10 மணி முதல் 10.10 மணி வரை வினாத்தாள் வாசிப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் பதிவு நம்பரை எழுதுவதற்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. அதன்பின்னர், தேர்வு காலை 10.15 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை நடைபெறும்.
9.12.2015 – தமிழ் முதல் தாள், 10.12.2015 – தமிழ் இரண்டாம் தாள், 12.12.2015 – ஆங்கிலம் முதல் தாள், 14.12.2015 – ஆங்கிலம் இரண்டாம் தாள், 16.12.2015 – அறிவியல், 18.12.2015 – சமூக அறிவியல், 21.12.2015 – கணிதம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary-Time Table for 12th and SSLC Half Yearly Exams