உலகப்புகழ் பெற்ற பல ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்தவரும் இரண்டு முறை ஆஸ்கார் விருதுகளை பெற்றவருமான பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் கார்னர் நேற்று விமான விபத்து ஒன்றில் பலியானதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவருக்கு வயது 61.
டைட்டானி, பிரேவ் ஹார்ட், அவதார், கமாண்டோ, ஆகிய படங்கள் உள்பட பல சூப்பர் ஹிட் வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த ஜேம்ஸ் ஹார்னர் நேற்று சிறிய ரக விமானம் ஒன்றில் அமெரிக்காவில் உள்ள சாந்தா பார்பரா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவர் சென்ற விமானம் தொழில்நுட்ப காரணத்தினால் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ஜேம்ஸ் ஹார்னர் அவர்களும், அவருடன் சென்ற விமானியும் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. ஜேம்ஸ் ஹார்னரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், விமானியின் உடல் தேடப்பட்டு வருவதாகவும் செய்திகள் கூறுகின்றது.
ஐந்து வயதில் இருந்தே பியானோ வாசிக்க கற்று கொண்ட ஜேம்ஸ் ஹார்னர், லண்டன் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகங்களில் இசை குறித்த பட்டப்படிப்புகளை முடித்தவர். கடந்த 1980ஆம் ஆண்டு முதல் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வந்த இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். டைட்டானிக் மற்றும் ‘மை ஹார்ட் வில் கோ ஆன்’ ஆகிய இரண்டு படங்களுக்காக இவருக்கு ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளது. இதுதவிர இவர் இசையமைத்த மேலும் எட்டு படங்கள் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
source: http://www.hollywoodreporter.com/news/james-horner-dead-titanic-composer-804365″>Hollywood Reporter
English Summary : Two times oscar award winner James Horner died in a plane crash.