சிம்புதேவன் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘புலி’ படத்தின் டீஸர் இதுவரை 1.9 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தில் விஜய் பாடியுள்ள பாடல் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

விஜய் பாடிய பாடல் குறித்து படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் கூறியபோது, “சச்சின் படத்தில் விஜய்யை ‘வாடி வாடி’ என தொடங்கும் ஆர்ப்பாட்டமான ஒரு பாடலை பாட வைத்திருந்தேன். ஆனால் இந்த படத்தில் விஜய்யை ஒரு மெலடி பாடலை பாட வைக்க விரும்பினேன். அவரும் மிகச் சிறப்பாக நான் எதிர்பார்த்ததை விட இந்த மெலடி பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் விஜய்யின் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் விருந்தாக அமையும்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே சமீபத்தில் விஜய் பாடிய செல்பி புள்ளே, கூகுள் கூகுள், கண்டாங்கி கண்டாங்கி போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த பாடலும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் வரும் செப். 17ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிரது.

English Summary : Ilayathalapathy Vijay sung a melody song in his next film “Puli” composed by Devi Sri Prasad.