தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வுகள் 20.04.2023 மற்றும் 03.05.2023 அன்று கணினி வழித் தேர்வு முறையில்(Computer Based Test) நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட வனப் பாதுகாவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் கணினி வழித்தேர்வாக நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏப்ரல் 9-ம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட கல்வி அலுவ பதவிக்கான முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 20-ம் தேதியும், ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறவிருந்த உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு மே மாதம் 3-ம் தேதியும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலே, கூறப்பட்டுள்ள இரண்டு தேர்வுகளுக்கும் முதல்நிலைத் தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு மையங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தேர்வாணைய இணையதளத்தில் திருத்தமாக (CORRIGENDUM – மாவட்டக் கல்வி அலுவலர், உதவி வனஅலுவலர்) வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.