தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் குரூப்-2 (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 11ஆம் தேதி கடைசி தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது குரூப் 2 பணிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வருகிற 18-ஆம் தேதி வரை இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தேர்வாணையத்தால் அறிவிப்பு செய்யப்படும் பதவிகளுக்கு விண்ணப்பிக்க நிரந்தரப் பதிவும், நிரந்தரப் பதிவுக் கட்டணமும் செலுத்திய பின்னரே தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குரூப்-2 (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கு விண்ணப்பிக்க, நவம்பர் 11-ஆம் தேதி, கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த கால அவகாசம் நவம்பர் 18-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பழைய முறைப்படி நிரந்தரப் பதிவு செய்தவர்கள், ஏற்கெனவே பெற்றுள்ள பயனாளர் குறியீடு, கடவுச் சொல் ஆகியவற்றை பயன்படுத்தி, புதிய முறை நிரந்தரப் பதிவில் தங்களுடைய சுய விவரப் பக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,863 நேர்முக தேர்வு அல்லாத ஒருங்கிணைந்த சார்நிலை பணியிடங்களுக்கு குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு வரும் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English summary-TNPSC Group 4 exam application date extended