தீபாவளி பண்டிகைக்காக தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிகளை முன்னிட்டு பல சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்கிக்கொண்டு வரும் நிலையில், இதற்கு அடுத்து வரும் பெரிய திருவிழாவான கிறிஸ்துமஸ், புத்தாண்டு, மற்றும் சபரிமலை சீசனையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது என்றும் இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளாதாவது:-

1. திருவனந்தபுரம்-சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரெயில் (வ.எண்:06122), இயக்கப்படுகிறது. இந்த ரெயில் டிசம்பர் மாதம் 2, 9, 16, 23, 30 மற்றும் ஜனவரி 6, 13 (புதன்கிழமைகளில்) ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு அடுத்தநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

மறுமார்க்கமாக சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 3, 10, 17, 31 மற்றும் ஜனவரி 7 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06123), அடுத்த நாள் காலை 7.45 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

2. சென்னை சென்ட்ரல்-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் (வ.எண்:06124), இயக்கப்படுகிறது. இந்த ரெயில் டிசம்பர் மாதம் 2, 7, 9, 14, 16, 21, 28, 30 மற்றும் ஜனவரி 4, 6, 11 ஆகிய தேதிகளில் சென்டிரலில் இருந்து மாலை 6.20 மணிக்கு இயக்கப்படும் ரெயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக கொல்லத்தில் இருந்து டிசம்பர் 1, 3, 8, 10, 15, 17, 22, 24, 29, 31 மற்றும் ஜனவரி 5, 7, 12, 14 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(06125), அடுத்தநாள் காலை 9.40 மணிக்கு சென்டிரலை வந்தடையும்.

3. சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில்(06109) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் டிசம்பர் மாதம் 4, 11, 18 மற்றும் ஜனவரி 1, 8, 15 ஆகிய தேதிகளில்(வெள்ளிக்கிழமை) சென்னை சென்டிரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக எர்ணாகுளத்தில் இருந்து டிசம்பர் 13, 20 மற்றும் ஜனவரி 10 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(06110), அடுத்த நாள் காலை 9.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடையும்.

இதில் பயணம் செய்வதற்கான முன்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் ரயில் பயணிகள் தங்கள் பயணத்தை முன்பதிவு செய்து உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

English Summary: Special Train for Christmas and New Year are announced Today. Reservations are going actively for Christmas Special Trains.