தமிழகத்தில் உள்ள 23 அரசு கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்பட்டு வரும் செவிலியர் பட்டயப் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றும் தகுதியுள்ள மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
செவிலியர் பட்டயப்படிப்பு தமிழகத்தில் மொத்தம் 23 அரசு கல்லூரிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன. 23 அரசு கல்லூரிகளிலும் சேர்த்து மொத்தம் 2,100 இடங்கள் படிப்பிற்கு பெரும் அளவில் விண்ணப்பங்கள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தொடங்கவுள்ள விண்ணப்ப விநியோகம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்றும் தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 9 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் இந்த விண்ணப்பத்தை நேரடியாக பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்ணப்பத்தை தமிழக அரசின் www.tn.gov.in , www.tnhelath.org ஆகிய இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்திற்கான கட்டணம் ரூ. 250 ஆகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஜாதிச் சான்றிதழின் இரண்டு நகல்களைச் சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
English Summary:Today, distributing application form for study of nurse diploma. The last date for August 4