தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக கனமழை பெய்து வருவதை அடுத்து சென்னையில் இருந்து கிளம்பும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்ட விபரங்கள் குறித்து ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இன்று ரத்து செய்யப்படும் ரயில்கள் குறித்த விபரங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று புறப்படும் 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை புறப்பட இருந்த 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:
1. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல்- ஹஸ்ரத் நிஜாமுதீன் தூரந்தோ ரயில் (எண்.12269)
2. இன்று காலை 7.55 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல்- சந்திரகாசி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 02842)
3. இன்று இரவு 9.10 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல்- புவனேஸ்வர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:12829)
மேற்கண்ட மூன்று ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல் நாளை திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம்- ஷார்மினார் எக்ஸ்பிரஸ் (எண்: 22641) எர்ணாகுளத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம்- பாட்னா எக்ஸ்பிரஸ்(எண்: 16359 வழி: காட்பாடி, ரேணிகுண்டா) ஆகிய ரெயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும் 22-ந் தேதியன்று திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 1.15 மணிக்குப் புறப்பட வேண்டிய திருநெல்வேலி- பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் (எண்: 22620) ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary-Trains cancelled due to heavy rains