exams-201115சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கனமழை காரணமாக தேர்வுகளை ஒத்தி வைத்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தற்போது தேர்வுகள் நடைபெறும் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளின் புதிய தேதிகளை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜாராம் நேற்று அறிவித்துள்ளார். இதன்படி டிசம்பர் 2ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை அண்ணாப் பல்கலைக் கழக வளாகத் தேர்வுகளும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் டிசம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த கூடுதல் தகவல்களை அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.annauniv.edu என்ற இணையதளத்தில் தேர்வு அட்டவணையை மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய தேர்வு தேதிகளின் விபரங்கள் வருமாறு

பழைய தேதி 12.11.2015 புதிய தேதி 21.12.2015

பழைய தேதி 13.11.2015 புதிய தேதி 22.12.2015

பழைய தேதி14.11.2015 புதிய தேதி 24.12.2015

பழைய தேதி16.11.2015 புதிய தேதி 28.12.2015

பழைய தேதி17.11.2015 புதிய தேதி 29.12.2015

பழைய தேதி18.11.2015 புதிய தேதி 30.12.2015

பழைய தேதி19.11.2015 புதிய தேதி 31.12.2015

பழைய தேதி20.11.2015 புதிய தேதி 02.01.2016

பழைய தேதி21.11.2015 புதிய தேதி 04.01.2016
English summary-Anna university exams date announced