சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் கனமழை காரணமாக பெரும் பாதிப்பு அடைந்த நிலையில் தெற்கு ரெயில்வே பல ரயில்களை ரத்து செய்துள்ளது. தண்டவாளங்களில் ஏற்பட்ட நீர்த்தேக்கம் காரணமாக ஒருசில ரெயில்களை ரத்து செய்து வரும் தெற்கு ரயில்வே இன்று ரத்து செய்யப்பட்ட ரெயில்களின் விபரங்களை அறிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (08.12.2015) புறப்படவேண்டிய மும்பை சி.எஸ்.டி. எக்ஸ்பிரஸ் (வ.எண்.11042), சென்னை சென்ட்ரல்-புதுடெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் (12615), சென்னை சென்டிரல்-புதுடெல்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் (12621) ஆகிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்று சென்னை எழும்பூரில் இருந்து புறப்படவேண்டிய சென்னை எழும்பூர்-கயா எக்ஸ்பிரஸ் (12390), சென்னை எழும்பூர்-தூத்துக்குடி இணைப்பு எக்ஸ்பிரஸ் (16129) உள்ளிட்ட ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (11064), கோவை-சென்னை சென்டிரல் (12674), கொல்லம்-சென்னை சென்டிரல் (06125), திருவனந்தபுரம்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் (12507), திருவனந்தபுரம்-கோரக்பூர் (12512), ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352) மற்றும் எர்ணாகுளம்-பாட்னா எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 12 ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
English summary-Trains cancelled today by southern railways