சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு இசை, கவின்கலைப் பல்கலைக்கழகத்தில் வரும் 23-ஆம் தேதியில் இருந்து 3 நாள்கள் பல்கலைக்கழக நிறுவன தின விழா, “ஜெயம்’ என்ற பெயரில் கொண்டாப்படுகிறது. தமிழ்நாடு இசை, கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள இசைக் கல்லூரிகள், அறிவியல்-கலைக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொள்கின்றனர். மாணவர்களுக்காக பாட்டு, பரத நாட்டியம், கர்நாடக இசை, புகைப்படக் கலை, ஓவியம், கோலப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட இசை அமைப்பாளர் தேவா, பின்னணிப் பாடகி சுசீலா, திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், கலாஷேத்ரா இயக்குநர் பிரியதர்ஷினி கோவிந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

“ஜெயம்’ விழாவில் 67 நாகசுரக் கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் வீணை காயத்ரி தெரிவித்தார்.

English Summary : Kavin kalai sponcers a ceremony “Jayam” in Adayaar chennai for three days. Musical university, science-arts college students are participating in this ceremony.