“மாதங்களில் நான் மார்கழி” என்று பகவத் கீதையில் கூறுகிறார் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. மார்கழி மாதம் என்பது பெருமாளை முழுமுதல் கடவுள
“காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமில்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமில்லை” என்று கூறுவார்கள். மகத்துவம் வாய்ந்த இந்த வைகுண்ட ஏகாதசி தினத்திற்கு முன் தினமான தசமி தினத்தில் வீட்டை கழுவி சுத்தம் செய்வது நல்லது. அந்த தசமி தினத்தன்று ஒரு வேளை உணவு மட்டும் அருந்திவிட்டு ஏகாதசி விரதம் இருக்க தொடங்க வேண்டும். மறுநாள் ஏகாதசி தினத்தில் அதிகாலை வேளையான 3 முதல் 4 மணிக்குள்ளான பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து விட்டு, அருகிலுள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திறக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை வழிபட வேண்டும்.
பின்பு வீட்டிற்கு திரும்பியதும் அந்நாள் முழுவதும் உணவேதும் உண்ணாமல் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும். துளசி இலைகள் ஊறவைக்கப்பட்ட நீரை தீர்த்தமாக அவ்வப்போது அருந்தலாம். முதியோர்கள், உடல் பலவீனமானவர்கள் பெருமாளுக்கு நிவேதித்த பால் மற்றும் பழங்களை சாப்பிடலாம். இந்நாள் முழுவதும் பெருமாளின் சிந்தனை மற்றும் தியானத்தில் இருந்து மௌன விரதமும் கடைபிடித்தால் ஏகாதசி விரதத்தின் பலன் பன்மடங்கு அதிகரிக்கும்.
ஏகாதசி தினத்தன்று இரவில் தூங்காமல் விஷ்ணு சஹஸ்ரநாமம், பெருமாள் மந்திரங்கள், பாகவதம் படித்தல் போன்ற ஆன்மீக செயல்களில் ஈடுபடடுவது சிறப்பானதாகும். இந்த வைகுண்ட ஏகாதசி தினத்தில் கண் விழித்து விரதம் இருப்பதால் உடலுக்கும், மனதிற்கும் மிகுதியான ஆன்மீக ஆற்றல் கிடைப்பதாக யோகிகள் கூறுகின்றனர். ஏகாதசி தினத்தின் மறுநாளான துவாதசி தினத்தில் வைணவ சம்பிரதாய நாள்காட்டியில் குறிப்பிட்டிருக்கும் நேரத்தில் துளசி தீர்த்தம் அருந்தி ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும்.
துவாதசி தினத்தன்று அரிசி சாதம் செய்து, சாம்பார் குழம்பில் நெல்லிக்காய் சேர்த்து கொள்ளுதல் வேண்டும். நெல்லி காய் என்பது லட்சுமி தேவியின் அம்சம் நிறைந்ததாகும். ஏகாதசி தினத்தில் செய்யப்படுகின்ற உணவில் நெல்லிக்காய் சேர்த்து, பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பின்பு நாம் சாப்பிடுவதால் திருமால் மற்றும் திருமகளின் முழுமையான ஆசிகளால் நாம் நீண்ட ஆயுளும், அனைத்து செல்வங்களும் நிரம்பிய வாழ்வும் கிடைக்க பெற்று, இறுதியில் பெருமாளின் வைகுண்ட லோகத்தை அடையும் பாக்கியத்தையும் பெறுகிறோம்