“அதிரடி பூஜை”
ஆயுத பூஜையை முன்னிட்டு வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி “அதிரடி பூஜை”. திரைப்பட நடிகர் மற்றும் சண்டை பயிற்சியாளர் பெசன்ட் ரவி தன் திரையுலக பயணம் பற்றியும் ,சண்டைப்பயிற்சி நுட்பங்கள் பற்றியும் ,உடல் வலிமை மற்றும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றியும் கலகலப்பாக விவரிக்கிறார். இந்த அதிரடி பூஜை நிகழ்ச்சி ஒரு ஞாயிறு மாலை 7:00 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ராம்குமார்.
“இசையுலகில் பிளாக் பாண்டி”
வேந்தர் தொலைக்காட்சியில் திங்கள் மாலை 7:00மணிக்கு விஜயதசமியை முன்னிட்டு வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சி “இசையுலகில் பிளாக் பாண்டி”.
திரைப்பட நகைச்சுவை “பிளாக் பாண்டி” தன் திரைப்பயணத்தின் போராட்டங்களையும் ,இசைத் துறையில் தற்போது எடுத்திருக்கும் புதிய அவதாரம் பற்றியும் கலகலப்பாக உரையாடுகிறார் .இந்த நிகழ்ச்சியை சாரா தொகுத்து வழங்குகிறார்.
“திமிரு நாயகன்”
வேந்தர் தொலைக்காட்சியில் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியாக திமிரு, காளை போன்ற திரைப்படங்களின் இயக்குனர் மற்றும் மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தின் மூலம் எதார்த்தமான நடிகராக ஜொலித்த தருண்கோபி தனது திரைப்படத்துறை அனுபவங்களையும், தனது அடுத்த படத்தின் கதை களத்தை பற்றியும், தனக்கே உரிய நக்கல் நையாண்டியுடன் பதிலளிக்கும் “திமிரு நாயகன்” நேர் கானல் மாலை 4:30 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
சிறப்பு விருந்தினர் நகைச்சுவை நடிகர் வையாபுரி வழங்கும் “ஜோதிட சவால்”
வேந்தர் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிறு மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியான “ஜோதிட சவால்” ஜீவநாடி ஜோதிடம் பாபு மனதில் இருக்கும் கேள்விகளுக்கு தெளிவாக பதிலளித்து வருகிறார்.
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக வையாபுரி இதில் கலந்து கொண்டு பல கேள்விகளை முன் வைக்கிறார் அதற்கான சுவாரஸ்யமான பதில்களை ஜோதிடர் பாபு விளக்குகிறார். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் சாரா.
“மாஸ்டர் கிச்சன்”
வேந்தர் தொலைக்காட்சியில் வரும் ஆயுத பூஜை (25-10-20) தினத்தன்று “தி மாஸ்டர்கிச்சன்” எனும் சமையல் நிகழ்ச்சி பகல் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்தநிகழ்ச்சியில் நேரடியாக உணவகத்திற்கு சென்று அங்கு பல விதமான சமையல் வகைகளை எப்படி செய்கிறார்கள் என்பதை பற்றியும் விளக்கும் ஒரு ரியாலிட்டி ஷோ .
இந்நிகழ்ச்சியில் ரோபோக்கள் உணவு பரிமாறும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்ட மோதி மஹால் டீலக்ஸ் இன் தி ரோபோட் தீம்டு ரெஸ்டாரன்டில் மாஸ்டர் செஃப் உடன் இணைந்து வேந்தர் டிவியின் மாஸ்டர் கிச்சன் குழுவினர் பன்னீர் லபாப்தர்(panner lababdar) பிர்ணி(ferni) ஆகிய உணவுகளை சமைத்து ரோபோக்கள் உடன் இணைந்து உண்டு மகிழ்ந்த கலகலப்பான அனுபவத்தைபகிர்ந்துகொள்கின்றனர்
மேலும் ஆச்சரியப்படுத்தும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு ரோபோக்கள் மட்டுமே சேவை செய்கிறது என்பது கூடுதல் விஷயம்.
“சிறப்பு பட்டிமன்றம்”
வேந்தர் டிவியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஆயுத பூஜையை முன்னிட்டு ஒளிபரப்பாகிறது. குறிப்பாக அனைத்து வயதினரையும் கவரும் வகையில் இந்த சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. கவிஞர் அண்ணா சிங்காரவேலு தலைமையில் சிரிக்க சிந்திக்க வைக்கும் சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது. பட்டிமன்றத்தின் தலைப்பாக கலியுகத்தில் நம்மை உயர்த்துவது நமக்காக வாழ்வதா பிறருக்காக வாழ்வதா என்ற தலைப்பில் தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்களை கொண்டு கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்ச்சி வேந்தர் டிவியில் ஆயுத பூஜை (25-10-20) தினத்தன்று ஞாயிறு காலை 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.