இளையதளபதி விஜய் பொதுவாக தன்னுடைய படங்களில் நடனத்தில் மட்டுமின்றி ஆக்ஷன் காட்சிகளிலும் டூப் இன்றி ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்நிலையில் வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளிவரவுள்ள ‘புலி’ படத்தில் டூப் இன்றி அவர் ஒரு வாள் சண்டைக்காட்சியில் நடித்துள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.
‘புலி’ படத்தின் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தபோது அந்த சண்டைக்காட்சியில் விஜய்யுடன் பணிபுரிந்த ஒரு ஸ்டண்ட் கலைஞர் இந்த படத்தில் இடம்பெற்ற அபாரமான வாள் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது தான் பார்த்த ஒரு விஷயத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் சண்டைக்காட்சியின்போது இயக்குனர் ‘ஆக்சன்’ என்று கூறிய அடுத்த வினாடி விஜய் மின்னல் வேகத்தில் தயாராகி வாள்சண்டையில் ஈடுபட்டதாகவும், இந்த சண்டைக்காட்சி அமைக்கப்பட்ட மேடையின் விளிம்பில் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி அவர் ஆக்ரோஷமாக வாள் சண்டை போட்டதாகவும், ஒரு ஷாட்டில் மேடையின் விளிம்பில் நின்று சண்டை போட்டு கொண்டிருந்த விஜய் கீழே விழுவது போன்றும், ஆனால் விஜய் சுதாரித்து தன்னுடைய கையில் உள்ள வாளினால் தரையில் தாங்கி உடனே மின்னல் வேகத்தில் மீண்டும் எழுந்து எதிரியை வீழ்த்துவது போன்ற ஒரு காட்சி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த காட்சியில் விஜய்க்கு டூப் வைக்கலாம் என்று உதவி இயக்குனர்கள் கூறியபோது, விஜய் தைரியமாக ‘தேவையில்லை நானே நடிக்கின்றேன்” என்று கூறி ஜெட் வேகத்தில் அந்த காட்சியை ஒரே ஷாட்டில் நடித்து முடித்ததாக கூறியுள்ளார். அவரது அபார வேகத்தைப் பார்த்த படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து தங்களை கைகளை தட்டி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், விஜய் போதும் என்று சைகை செய்தபோதிலும் கைதட்டல் விண்ணை பிளந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சி திரையில் தோன்றும்போது கண்டிப்பாக ரசிகர்களின் விசில் சத்தம் விண்ணை பிளப்பது உறுதி என்று படக்குழுவினர் கூறி வருகின்றனர்.
English Summary: Vijay Lighting Fast Sword Fight in Puli movie.New Information