Sasikumar-1இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ‘தாரை தப்பட்டை’ படத்தில் நடித்து வந்த சசிகுமார், இந்த படத்திற்காக வேறு எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் ‘தாரை தப்பட்டை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்ததை அடுத்து, சசிகுமார் அறிமுக இயக்குனர் வசந்தமணி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘வெற்றிவேல்’ என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக இரண்டு அறிமுக நாயகிகள் நடிக்கவுள்ளதாகவும், இருவரையும் தேர்வு செய்ய படக்குழுவினர் ஆடிஷன் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இரண்டு நாயகிகளின் தேர்வு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும், விரைவில் இருவரின் பெயர்களும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தில் நீளமான வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் தோற்றமளிக்கும் சசிகுமார், ‘வெற்றிவேல்’ படத்தில் வழக்கமான தனது ஹேர் ஸ்டைலில் தோன்றவுள்ளார் என்றும் அதேபோல் சசிகுமாரின் முந்தைய படங்கள் போன்றே நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இந்த படம் அமையும் என்றும் இயக்குனர் வசந்தமணி தெரிவித்துள்ளார்.  மேலும் இந்த படத்தில் ஆக்சன், காமெடி, காதல் ஆகியவை ஒருங்கே கலந்து ஒரு பொழுதுபோக்கு படமாக உருவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரபு, தம்பி ராமையா, ரேணுகா, விஜீ மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படத்தை ரவிந்த்ரன் என்பவர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது.

English Summary:SasiKumar with two New Face Actress in Vetrivel.