அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்யின் 59வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னை படப்பிடிப்பு முடிவடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘விஜய் 59’ படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கோவா விரைவில் கோவா செல்ல திட்டமிட்டுருந்தனர். ஆனால் தற்போது கோவா பகுதியில் மழை பெய்து வருவதால், கோவா படப்பிடிப்பு ஒருசில வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
கோவாவில் விஜய் மற்றும் எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் மற்றும் உரையாடல் காட்சிகள் படமாக்கப்பட இருந்ததாகவும் இந்த படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்து வரும் எமிஜாக்சனின் காட்சிகள் அனைத்தும் பிளாஷ்பேக்கில் வரவுள்ளதாகவும், எமிஜாக்சன் இந்த படத்தில் மலையாளி பெண்கேரக்டரில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்து வரும் இந்த படத்தில் சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்த படம் இவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தை ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார்.
English summary-Vijay’s 59th movie shooting delayed