நேற்று சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட ‘சர்கார்’ பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ஒரு குட்டிக்கதையை கூறி அனைவரையும் அசத்தினார்.
ஒரு மன்னன் தான் ஆட்சி செய்யும் ஊருக்கு சென்றபோது அவரை வரவேற்றவர் மக்கள் லெமன் ஜூஸ் கொடுத்தனர். அதனை வாங்கி பருகிய மன்னர் அதில் உப்பு இல்லை என்று கூறினார். உடனே அருகில் இருந்தவர் கடைக்கு சென்று கொஞ்சம் உப்பு எடுத்துவா என்று ஒருவரை அனுப்பினார்.
அப்போது மன்னன் உப்பை எடுத்து வரவேண்டாம், விலை கொடுத்து வாங்கி வா என்றும், மன்னனே உப்புக்கு காசு கொடுக்கவில்லை என்றால் அனைவரும் இலவசமாக எடுத்துவிடுவார்கள் என்றும் கூறினார்.
மேலும் அவர் தான் தமிழகத்தின் முதல்வரானால் முதலில் என்ன செய்வார் என்ற கேள்விக்கு ‘இது எல்லோரும் சொல்றதுதான், லஞ்சம் ஊழலை ஒழிக்க வேண்டும். ஆனால் ஊழல், லஞ்சத்தில் நாம் ஊறிப்போனதால் இதனை 100% ஒழிக்க முடியுமா? என்று தெரியவில்லை. ஆனாலும் ஒழித்தே ஆகவேண்டும்’ என்று கூறினார் .