இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு படக்குழுவினர் ‘தெறி’ என்று டைட்டில் வைத்துள்ளனர். மேலும் இந்த படத்தின் மூன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் நேற்று இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு ‘காக்கி’, ‘வெற்றி’, ‘தாறுமாறு’, துப்பாக்கி 2′, ‘தெறி’ ஆகிய டைட்டில்கள் கடந்த சில நாட்களாக பரிசீலனை செய்யப்பட்டு வந்ததாகவும், இறுதியாக விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் ‘தெறி’ டைட்டிலை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிற்து.
‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் விஜய்-எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கிட்டத்தட்ட இந்த படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், ஒருசில பேட்ச்வொர்க் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு பாடலை தவிர மீது அனைத்து பாடல்களும் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டதாகவும், அந்த ஒரு பாடலும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது,.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அட்லியின் இயக்க திறமையை நேரில் கண்டு வியந்த விஜய், மீண்டும் அவருடன் ஒரு படத்தில் விரைவில் இணைய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
English summary-Vijay’s Theri film first look poster released