இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கோவாவில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கபட்டு வருவதாக கூறப்படுகிறது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி மற்றும் ‘மிஷன் இம்பாசிபிள் 5’ உள்பட பல பிரமாண்ட படங்களுக்கு ஸ்டண்ட் பயிற்சி இயக்குனராக பணிபுரிந்த ஹாலிவுட்டின் Kalayon Vodenincharov மற்றும் கோலிவுட்டின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் ஆகியோர்களின் மேற்பார்வையில் ‘தெறி’ படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த சண்டைக்காட்சியில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஏராளமான துணை ஸ்டண்ட் கலைஞர்கள் வந்துள்ளதாகவும், அவர்களுடன் விஜய் மோதும் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கபட்டு வருவதாகவும் இந்த படத்தின் ஒளிப்பதிவு இயக்குனர் ஜார்ஜ் வில்லியம்ஸ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்த படம் இவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தை ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார்.
english summary-Vijay’s theri shooting