University-Exams-281115
சென்னை பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர்கள் வெள்ள பாதிப்பில் தங்களுடை பட்டச் சான்றிதழ்களை இழந்திருந்தால் அவர்களுக்கு கட்டணமின்றி மறு சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் இரா. தாண்டவன் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

வெள்ள பாதிப்பில் பலர் தங்களுடைய பட்டச் சான்றிதழ்களை இழந்திருக்கும் வாய்ப்பு உள்ளது.
அவ்வாறு வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் கட்டணம் இன்றி உரிய சான்ற்தழ்கள் வழங்க சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், சான்றிதழை தவற விட்டத்தற்கான காவல்துறை சான்றிதழ், நகரமன்ற உறுப்பினர் அல்லது வட்டாட்சியரின் ஒப்புதலுடன் பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்தால் சான்றிதழ் இழந்தவர்களுக்கு உடனடியாக மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டுவிடும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary-Degree certificates damaged or lost to be given free of cost