கடந்த சில நாட்களாக இந்தியாவில் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் கிளைமாக்ஸாக நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அரையிறுதியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதியது.
டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஷமி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே தொடக்க ஆட்டக்காரர் ராய் பத்ரி பந்தில் போல்டு ஆனார். இதனை அடுத்து ரஷ்ஷல் பந்துவீச்சில் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ஹேல்ஸூம் அவுட் ஆனதால் 8 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து அணி தத்தளித்தது.
இருப்பினும் இங்கிலாந்து அணியின் ரூட் மற்றும் பட்லர் அணியை சரிவை நிறுத்தினர். இறுதியில் இங்கிலந்து அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ரன்கள் எடுத்தது.
156 ரன்கள் எடுத்தால் கோப்பையை நமக்கே என்ற இலக்குடன் களமிறங்கி மேற்கிந்திய தீவுகள் அணி, நட்சத்திர பேட்ஸ்மேன்களான கெய்லே விக்கெட்டை மற்றும் சார்லஸ் விக்கெட்டுக்களை இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து இழந்தது. இருப்பினும் சாமுவேல் அதிரடியாக விளையாடினார். அவர் 66 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சருடன் 85 ரன்கள் எடுத்தார். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 19.4 ஓவரில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2016ஆம் ஆண்டின் உலகக்கோப்பை சாம்பியன் என்ற பெருமையை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுள்ளது.
சாமுவேல் ஆட்டநாயகனாகவும், விராத் கோஹ்லி தொடர் நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
English Summary: Both Men and Women Team of West Indies had been the Champions of T20 Worldcup 2016.