யுபிஐ என்பது 24 மணி நேர கட்டணச் சேனலாகும், இது வாடிக்கையாளர்களை பாதுகாப்பான, நிகழ்நேரப் பணம் செலுத்த அனுமதிக்கிறது. தற்போது 90 சதவீத மக்கள் இணையம் மூலமாக பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எந்த வித கட்டணமும் மக்களுக்கு இல்லை என்பது தான் முக்கிய விஷயம்.
இந்நிலையில், இணைய உதவி இல்லாமல் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் முறையை பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) அறிமுகப்படுத்தியுள்ளது. UPI 123PAY முறையை எந்த போன் பயனர்களும் UPI பரிவர்த்தனைகளைச் செய்வதற்கான அம்சத்தை கொண்டுள்ளது.
UPI 123PAY செயல்படுத்தும் வழிமுறைகள்:
- பஞ்சாப் நேஷனல் வங்கியின் 9188-123-123 என்ற IVR எண்ணை டயல் செய்ய வேண்டும்.
- இந்த செயல்முறை பயனருக்கு விருப்பமான மொழியில் செயல்படும் வகையில் உள்ளது.
- நீங்கள் பணம் செலுத்த வேண்டிய பயனரை தேர்வு செய்ய வேண்டும்.
- உங்கள் பண பரிவர்த்தனையை அங்கீகரிக்கவும்.
- UPI 123PAY உடன் உங்கள் கணக்கைப் பதிவு செய்யும் போது, நீங்கள் 4-6 இலக்க UPI பின்னை அமைக்க வேண்டும்.
- வாடிக்கையாளர் ஒவ்வொரு முறையும் பரிவர்த்தனை செய்யும் போது UPI பின்னை உள்ளிட வேண்டும்.