செல்போன் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் எனில் இணைய வசதி மூலம் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனில் தொலைக்காட்சிகளை பலர் பார்த்து வருகின்றனர். ஆனால் இதனால் இண்டர்நெட் டேட்டாவுக்காக பயனாளிகள் அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் இந்நிலையில் செல்போனில் இணைய வசதி இல்லாமல், தொலைக்காட்சி சேவைகளை இலவசமாக தூர்தர்ஷன் வழங்கி வருகிறது.
இதுகுறித்து தூர்தர்ஷன் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உட்பட 16 நகரங்களில் இந்த சேவையை கடந்த பிப்ரவரி மாதம் முதல் செல்பேசி வழி தொலைக்காட்சி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சேவையை பெற ஆண்டெனாவுடன் கூடிய டிவிபி-டி2 கருவியை பயன்படுத்த வேண்டும். இதற்கு இணையவசதி தேவையில்லை. பயணத்தில் இருந்துக்கொண்டே தூர்தர்சனின் தொலைக்காட்சி சேவைகளை இலவசமாக காண முடியும்
இந்த சேவை மூலம் முதற்கட்டமாக டிடி நேஷனல், டிடி நியூஸ், டிடி பாரதி, டிடி ஸ்போர்ட்ஸ், டிடி கிசான் ஆகிய தொலைக்காட்சிகளை மட்டுமே காண முடியும். விரைவில் மற்ற தொலைக்காட்சிகளையும் ஒளிபரப்புவதோடு, சிக்னல் பெறக்கூடிய பகுதிகளை விரிவுப்படுத்தவும் தூர்தர்சன் திட்டமிட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது
இணையம் இன்றி, இலவசமாக தொலைக்காட்சி சேவைகளை எளிய தொழில்நுட்பங்கள் மூலம் தூர்தர்ஷன் வழங்கி வரும் இந்த முயற்சிக்கு பொதுமக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: Without Internet Dhoordharsan channel will be viewed in mobile, New Attempt.