பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரிய 325 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. சீனியர் மேனேஜர் (Credit) – MMG Scale III
2. மேனேஜர் (Credit) – MMG Scale III
3. சீனியர் மேனேஜர் (Law) – MMG Scale III
4. மேனேஜர் (Law) – MMG Scale III
5. மேனேஜர் (HRD) – MMG Scale III
6. ஆபிசர் (IT) – JMG Scale III

காலிப்பணியிடங்கள்:
1. சீனியர் மேனேஜர் (Credit) – 51
2. மேனேஜர் (Credit) – 26
3. சீனியர் மேனேஜர் (Law) – 55
4. மேனேஜர் (Law) – 55
5. மேனேஜர் (HRD) – 18
6. ஆபிசர் (IT) – 120

மொத்தம் – 325 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 02.03.2019
ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்: 24.03.2019

தேர்வுக்கட்டணம்:
பொது / ஓபிசி பிரிவினர் / முன்னாள் ராணுவத்தினர் – ரூ.600
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / PWBD – ரூ.100

சம்பளம்:
1. சீனியர் மேனேஜர் (Credit) – மாதம் ரூ.42,020 முதல் ரூ.51,490 வரை
2. மேனேஜர் (Credit) – மாதம் ரூ.31,705 முதல் ரூ.45,950 வரை
3. சீனியர் மேனேஜர் (Law) – மாதம் ரூ.42,020 முதல் ரூ.51,490 வரை
4. மேனேஜர் (Law) – மாதம் ரூ.31,705 முதல் ரூ.45,950 வரை
5. மேனேஜர் (HRD) – மாதம் ரூ.31,705 முதல் ரூ.45,950 வரை
6. ஆபிசர் (IT) – மாதம் ரூ.23,709 முதல் ரூ.42,020 வரை

வயது வரம்பு: (01.01.2019 அன்றுக்குள்)
1. சீனியர் மேனேஜர் (Credit) – 25 வயது முதல் 37 வயது வரை இருத்தல் வேண்டும். 2. மேனேஜர் (Credit) – 25 வயது முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும்.
3. சீனியர் மேனேஜர் (Law) – 25 வயது முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும்.
4. மேனேஜர் (Law) – 25 வயது முதல் 32 வயது வரை இருத்தல் வேண்டும்.
5. மேனேஜர் (HRD) – 25 வயது முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும்.
6. ஆபிசர் (IT) – 25 வயது முதல் 28 வயது வரை இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
1. சீனியர் மேனேஜர் (Credit) – என்ற பணிக்கு, CA / ICWA / MBA அல்லது PGDM (Finance) அல்லது அதற்கிணையான பட்ட மேற்படிப்பை AICTE -ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தது 5 வருட வங்கித்துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

2. மேனேஜர் (Credit) – என்ற பணிக்கு, CA / ICWA / MBA அல்லது PGDM (Finance) அல்லது அதற்கிணையான பட்ட மேற்படிப்பை AICTE -ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தது 3 வருட வங்கித்துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

3. சீனியர் மேனேஜர் (Law) – என்ற பணிக்கு, சட்டப்படிப்பில் இளங்கலை பட்டத்தை, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தது 7- வருட சட்டத்துறை சார்ந்த பணி / பயிற்சி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

4. மேனேஜர் (Law) – என்ற பணிக்கு, சட்டப்படிப்பில் இளங்கலை பட்டத்தை, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தது 3- வருட சட்டத்துறை சார்ந்த பணி / பயிற்சி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

5. மேனேஜர் (HRD) – என்ற பணிக்கு, 2- வருட முதுகலை பட்டப்படிப்பை, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தது 3- வருட HR துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

6. ஆபிசர் (IT) – என்ற பணிக்கு, MCA / B.E / B.Tech என்ற பட்டப்படிப்பில் எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் / கம்யூட்டர் சயின்ஸ் / கம்யூட்டர் சயின்ஸ் & டெக்னாலஜி / ஐ.டி (IT) போன்ற பாடத்துறைகளில் ஏதேனும் ஒன்றை, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் குறைந்தது 1- வருட ஐ.டி துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். பஞ்சாப் நேஷனல் வங்கியின், www.pnbindia.in – என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற, https://www.pnbindia.in/Recruitments.aspx – என்ற இணைதளத்தில் சென்று பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *