மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் (சி.எஸ்.ஐ.ஆர்.) நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கான (நெட்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்குத் தகுதி பெறவும், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறவும் நெட் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.

இதில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளை உள்ளடக்கிய 70-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கான நெட் தேர்வினை தற்போது தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. இதேப் போல, வேதியியல், புவியியல், சுற்றுச்சூழல், கடல்சார் மற்றும் கோள்கள் தொடர்பான அறிவியல், கணித அறிவியல், இயற்பியல், உயிரியல் போன்ற படிப்புகளுக்கான நெட் தேர்வை சி.எஸ்.ஐ.ஆர். நடத்துகிறது.

தற்போது, 2019 ஆம் ஆண்டுக்கான சி.எஸ்.ஐ.ஆர் நெட் தேர்வு வருகின்ற ஜூன் 16-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஆன்-லைனில் மூலம் விண்ணப்பிக்க மார்ச் 18-ஆம் தேதி வரையில் கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ. 1000 தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ. 500, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 250 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான மேலும் விவரங்களுக்கு http://csirhrdg.res.in/ என்ற இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *