சென்னை: தமிழக அரசின் ஏற்பாட்டில் வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வளைகுடா நாடுகள் பணிக்கு தனியார் நிறுவனங்கள் வழியாக இளைஞர்கள் சென்று பணத்தை கொடுத்து ஏமாறுவதை தடுக்க தமிழக அரசின் சார்பில் நேரடியாக ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதன்படி தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தமிழக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. இது குறித்து அதன் நிறுவன தலைவர் மற்றும் இயக்குனர் சுனில் பாலிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டிப்ளமா எலக்ட்ரிக்கல் மெக்கானிக்கல் தேர்ச்சி பெற்று மூன்று ஆண்டு அனுபவம் அல்லது 10ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., படிப்புடன் ஐந்து ஆண்டு அனுபவம் பெற்றவர்கள் துபாயின் முன்னணி நிறுவன பணிக்கு தேவைப்படுகின்றனர்.

இவர்களுக்கு மாதம் 29 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.அதேபோல், டீசல் இன்ஜின் மற்றும் எலக்ட்ரிக்கல் பம்ப் டெக்னீஷியன் பணியில் மாதம் 38 ஆயிரத்து, 500 ரூபாய் சம்பளத்தில் ஆட்கள் தேவை. திறமைக்கேற்றபடி ஊதியம் நிர்ணயம் செய்யப்படும். மிகை ஊதியம் இருப்பிடம் உள்ளிட்ட சலுகைகள் அந்நாட்டு அரசின் சார்பில் நிர்ணயிக்கப்படும் .இதற்கு 35 வயதுக்குட்பட்ட நபர்கள் தங்கள் சுய சான்றிதழ் விபரங்கள் பாஸ்போர்ட் மற்றும் புகைப்படத்துடன் omcsfe2018@gmail.com என்ற முகவரிக்கு வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து 95662 39685, 82206 34389, 044 – 2250 5886, 2250 2267 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *