சென்னை: வங்கிகள் இணைப்பை எதிர்த்து வரும் 26ம் தேதி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் விஜயா வங்கி தேனா வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்து இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி இணைப்புக்கு பின் இரண்டாவதாக இந்த மூன்று வங்கிகள் இணைக்கப்பட உள்ளன. இதனால் ‘வங்கிகளின் வாராக் கடனை பெறுவதில் பிரச்னை ஏற்படும்; ஊழியர்கள் வேலை இழப்பர்’ என வங்கி ஊழியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இணைப்பை கைவிடக் கோரி வேலை நிறுத்த போராட்டத்தையும் அறிவித்துள்ளன. ஆர்ப்பாட்டம்இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது: பாங்க் ஆப் பரோடா விஜயா வங்கி தேனா வங்கி ஆகியவற்றை ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து பல முறை ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம்; இருந்தும் மத்திய அரசு முடிவை மாற்றுவதாக தெரியவில்லை.

முதலில், எஸ்.பி.ஐ., வங்கிகளை இணைத்தாலும் இன்னும் நஷ்டத்தில் தான் இயங்கி வருகின்றன. தற்போது மூன்று வங்கிகளிலும் மொத்தம் 80 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடன் உள்ளது. இணைப்புக்கு பின் பல கிளைகள் மூடப்படும்; ஊழியர்கள் குறைக்கப்படுவர். அதனால், வாராக் கடனை பெறுவதில் கவனம் செலுத்தப்படாது. கிளைகள் மூடலால் ஊழியர்கள் எண்ணிக்கை குறையும்; ஆண்டுக்கு 15 ஆயிரம் புதிய ஊழியர்களை வேலைக்கு எடுப்பது தடைபடும். பிரச்னைஇது போன்று பல்வேறு பிரச்னைகள் உள்ளதால் வங்கிகள் இணைப்பை நிறுத்த வேண்டும். இதற்காக இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரும் 26ல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *