சென்னையில் நேற்று ”உலக இட்லி தினம்’ தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த இட்லி தினத்தில் 44 கிலோ எடையுள்ள இட்லியை வெட்டி சமையல் கலை தொழிலாளிகள் கொண்டாடினர்.

இனி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30அம் தேதியை உலக இட்லி தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்பட உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இனி ஒவ்வொரும் ஆண்டும் இட்லி தினம் கடைபிடிக்க தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என சமையல் கலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜாமணி அவர்கள் கூறியபோது, “தமிழர்களின் பாரம்பரிய உணவாக இருக்கும் இட்லி, உடலுக்கு கேடு விளைவிக்காத ஆரோக்கியமான உணவு ஆகும். எங்களுடைய சங்கம் சார்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு 1,300 வகையான இட்லிகள் தயாரிக்கப்பட்டன. இதுபோன்ற நிகழ்வு உலகில் வேறு எங்கும் நடைபெற்றதாக தகவல் இல்லை. இட்லியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-30 ஆம் நாள், உலக இட்லி தினமாக கொண்டாட வேண்டும். அதற்கான முதல் நிகழ்வாக உலக இட்லி தினம் தற்போது கொண்டாடப்படுவதாக அவர் கூறினார்.

English Summary : World Idly day was celebrated yesterday in Chennai. Totally 1300 types of Idly prepared during this celebration.