பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் உணவு வழங்கும் வசதி, ரயில்வேயில் உள்ள நிலையில் தற்போது வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரயில்வே துறை பயணிகளுக்கு வழங்கியுள்ளது.
உணவு ஆர்டர் செய்ய ரயில்வேயில் வாட்ஸ்அப் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்வே தனது இ-கேட்டரிங் சேவையை வாடிக்கையாளர்களுக்கு IRCTC மூலம் வழங்குகிறது.
எனவே, பயணிகள் இந்த இ-கேட்டரிங் சேவை மூலம் தங்களின் உணவை வாட்ஸ்அப் தொடர்பு சேவை மூலம் ஆர்டர் செய்யலாம். இதற்காக பிசினஸ் வாட்ஸ்அப் எண் +91-8750001323 பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆர்டர் செய்வது எப்படி?
முதல் கட்டத்தில், www.ecatering.irctc.co.in என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இ-டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளருக்கு இ-கேட்டரிங் சேவையைத் தேர்ந்தெடுக்க பிசினஸ் வாட்ஸ்அப் எண் செய்தியை அனுப்பும். இந்த விருப்பத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் IRCTC இன் இ-கேட்டரிங் இணையதளம் மூலம் நிலையங்களில் கிடைக்கும் உணவகங்களில் இருந்து உணவை முன்பதிவு செய்ய முடியும்.
வாட்ஸ்அப் தொடர்பு சேவையின் இரண்டாம் கட்டத்தில், வாட்ஸ்அப் எண் வாடிக்கையாளருக்கு இருவழி தொடர்பு தளமாக மாறும். இதில், AI பவர் சாட்போட் பயணிகளின் இ-கேட்டரிங் சேவை தொடர்பான அனைத்து வகையான கேள்விகளையும் எடுக்கும் மற்றும் பயணிகளுக்கான உணவையும் முன்பதிவு செய்யும். தற்போது தேர்வு செய்யப்பட்ட சில ரயில்களில் மட்டும் வாட்ஸ்அப் தொடர்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பின்னர், வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் மற்ற ரயில்களிலும் வாட்ஸ்அப் தொடர்பு முறை அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இனி வாட்ஸ்அப்பில் உணவுகளை ஆர்டர் செய்ய நீங்கள் IRCTC செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.