ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான வழிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி,
பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும்.
அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது.
மத நிகழ்வுகளுக்கு தடை; வழிபாட்டு தலங்கள் மூடப்படும்.
மருத்துவ மற்றும் அத்தியாவசிய தேவைக்களுக்காக செல்பவர்களுக்கு மட்டும் அனுமதி.
தொற்று அதிமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல்வைக்கப்படும்.
மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்கு தடை. மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவங்கள், மெக்கானிக் கடைகள் இயங்க அனுமதி.
தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் தற்போதைய நிலையே தொடரும்.
மே 3 வரை திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள், பொதுக்கூட்டங்களுக்கு தடை தொடரும்.
இறுதிச்சடங்கில் பங்கேற்க 20 பேர் வரை மட்டுமே அனுமதி.

ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு,

ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு கட்டுமான பணிகளுக்கு அனுமதி.
சிறப்பு பொருளாதார மண்டலங்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி.
சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். மாஸ்க் அணிந்து தொழிலாளர்கள் சமூக இடைவெளியுடன் பணியாற்ற அனுமதி.
ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால் மாஸ்க் அணிவது கட்டாயம்.
மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள், இறைச்சிக்கடைகள் செயல்பட அனுமதி.
விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *