ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது, மத்திய அரசு

ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி

கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை – மத்திய அரசு

விவசாய உபகரணங்கள், உரங்கள் விற்பனை நிலையங்கள் செயல்படலாம்

விவசாயப் பொருள் போக்குவரத்து தங்குதடையின்றி நடைபெறுவதை மாநில அரசுகள் உறுதி செய வேண்டும்

மீன்பிடித் தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி

தேயிலை, காஃபி, ரப்பர் உற்பத்திப் பணிகளை 50 சதவீத ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம்

பால் உற்பத்தி மற்றும் விநியோகம் வழக்கம் போல நடைபெறலாம்

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்படி வங்கிகள், ஏ.டி.எம்-கள் செயல்படும்

கல்வி நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம்

அத்தியாவசியப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்க தடை இல்லை

ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி

100 நாள் வேலை திட்டத்தின்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்

ஊரகப் பகுதியில் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்கலாம்

ஊரகப் பகுதியில் சிறு, குறு தொழில் சார்ந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்

லாரிகள் பழுதுபார்க்கும் பட்டறைகள் இயங்க அனுமதி

நெடுஞ்சாலைகளில் உள்ள தாபாக்கள் சமூக இடைவெளியுடன் இயங்க அனுமதி

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை

பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம்

5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட கூடாது – மத்திய அரசு

பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்

எலக்ட்ரீசியன், பிளம்பர், மெக்கானிக்குகள், மரவேலை செய்பவர்கள் பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *