கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக, மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாட்டு மக்கள் இடையே சுமார் 25 நிமிடங்கள் இடம்பெற்ற பிரதமர் மோடியின் பேச்சில் முக்கிய அம்சங்கள்:
* இந்தியாவில், கொரோனா பாதிப்பு ஏற்படாத போது கூட விமான நிலையத்தில் ஒவ்வொரு பயணிகளையும் சோதனையிட துவங்கினோம்.
* இந்த பிரச்னை பெரியதாக ஆக வேண்டும் என நாம் காத்திருக்கவில்லை. வைரஸ் பிரச்னை ஏற்பட்டவுடன், அதனை தடுக்க வேண்டும் என்பதற்காக துரித கதியில் நடவடிக்கை எடுத்தோம்.
* உரிய நேரத்தில், உரிய முடிவு எடுக்காமல் இருந்திருந்தால், என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் எண்ணிபார்க்க முடியாது.
* கொரோனா பாதிப்பு 100 ஐ தொடுவதற்கு முன்னரே, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்தோம். பாதிப்பு 500 ஆக அதிகரித்த போது, 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
*ஊரடங்கை எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதை, ஏப்., 20 வரை அனைத்து மாவட்டங்கள், மாநிலங்கள் தீவரமாக கண்காணிக்கப்படும். அந்த பகுதிகளில், கொரோனா பாதிப்பு குறைக்கப்பட்டால், சில முக்கியமான நடவடிக்கைகள் துவங்கும். ஆனால், அதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படும்.
* இந்தியா முழுவதும் 220 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

* ஊரடங்கு காலகட்டத்திற்கான, புதிய வழிமுறைகள் நாளை வெளியிடப்படும். புதிய வழிமுறைகளில், ஏழைகள் மற்றும் தினசரி சம்பளம் பெறுவோரின் நலன்கள் கவனத்தில் கொள்ளப்படும். ராபி பயிர்கள் அறுவடை செய்யும் தற்போது நடந்து வருகிறது.
*விவசாயிகள் சந்திக்கும் பிரச்னையை வெகுவாக குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
*தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்புஅரணை அகற்ற முடியாது
* கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் பணியில் நம் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
*ஏப்., 20 வரை ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். கொரோனா கடடுக்குள் கொண்டு வரும் பகுதிகளில் 20க்கு பிறகு தளர்வு
* ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், கொரோனா மீண்டும் பரவ துவங்கினால் தளர்வுகள் ரத்து செய்யப்படும்
* ஏழை மக்களின் நிலையை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் நடைமுறைக்கு வரும்.
* முக கவசங்களை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம்
* ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

* உலக நாடுகளின் அனுபவத்தின்படி, கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தொடும் போது, 1, 500- 1,600 படுக்கைகள் தேவைப்படும். ஆனால், நம்மிடம், தற்போது, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 600 மருத்துவமனைகள் மற்றும் ஒரு லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதனை இன்னும் விரிவுபடுத்தி வருகிறோம்.
* கொரோனாவை எதிர்த்து போரிடும் டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள், போலீசார் ஆகியோரை மக்கள் மதிக்க வேண்டும். உங்கள் பணிகள், தொழிற்சாலையில் உடன் பணியாற்றுபவர்களுடன் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். பணியாளர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *