ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘சீம ராஜா’, செப்டம்பர் 13-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

‘சீம ராஜா’ பணிகளை முடித்துவிட்டு, ராஜேஷ் மற்றும் ரவிக்குமார் ஆகியோரது படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ராஜேஷ் இயக்கிவரும் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. சிவகார்த்திகேயன் படத்துக்கு முதல் முறையாக இசையமைக்கவுள்ளார் ஹிப் ஹாப் தமிழா என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், சதீஷ், ராதிகா சரத்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *