ராமின் ‘பேரன்பு’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ்:

ராம் இயக்கியுள்ள ‘பேரன்பு’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் சான்றிதழ் கிடைத்துள்ளது.

ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேரன்பு’. மம்மூட்டி, அஞ்சலி, சாதனா, அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, லிவிங்ஸ்டன், அருள்தாஸ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பி.எல். தேனப்பன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வைரமுத்து, சுமதி ராம் மற்றும் கருணாகரன் மூவரும் பாடல்கள் எழுதியுள்ளனர். மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவள் தகப்பனுக்கும் இடையிலான உணர்வுதான் இந்தப் படத்தின் அடிநாதம்.

இந்தப் படத்தைப் பார்த்த மத்திய தணிக்கை வாரிய உறுப்பினர்கள், யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். 2 மணி நேரம் 27 நிமிடங்கள் ஓடும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகியுள்ளது

மம்மூட்டியின் பிறந்த நாளான செப்டம்பர் 7-ம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *