சென்னையில் அவ்வப்போது நிர்வாக வசதி உள்பட பல்வேறு காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது 16 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். நேற்று கமிஷனர் ஜார்ஜ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஆர்.மணிமேகலை வேப்பேரி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும், எப்.லூடா வடபழனி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும், எஸ்.சார்லஸ் சாம் ராஜதுரை வளசரவாக்கம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், ஜி.ராஜேஸ்வரி ராயப்பேட்டை மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டராகவும், சி.முத்தேலு எஸ்.சி.பி. இன்ஸ்பெக்டராகவும், எஸ்.தரணி ராஜமங்களம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், ஏ.கண்ணகி மணலி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், இமாகுலேட் தேவோடா புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டராகவும், எஸ்.லட்சுமி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டராகவும், ஜெ.அமல்ராஜ் பரங்கிமலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், ஜெ.ஆனந்தராஜன் திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்படுகின்றனர்.
வேப்பேரி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெ.ஜமுனாராணி, வடபழனி மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் எஸ்.ரேகா, வளசரவாக்கம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் கே.சேட்டு, ராயப்பேட்டை மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் என்.கே.வனிதா, திருவொற்றியூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜி.பிரபு ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
English Summary:16 Inspectors, the sudden change in Chennai. Commissioner George directive.