Vethalamசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் ‘வேதாளம்’ பர்ஸ்ட் லுக் சமூக இணையதளங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில் அஜீத் ரசிகர்களை ஆட்டம் போடவைக்கும் படியான ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தர லோக்கல் பாடல்களை கம்போஸ் செய்வதில் அபார திறமை பெற்ற இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத், வேதாளம் படத்திற்காக ஒரு ‘தரலோக்கல்’ பாடலை கம்போஸ் செய்துள்ளாராம். ஏற்கனவே அனிருத் இசையமைத்த தனுஷின் ‘மாரி’ படத்தில் இடம்பெற்ற தரலோக்கல் பாடல் தியேட்டரை அதிர வைத்தது போல் பல மடங்கு இந்த பாடலுக்கு தியேட்டர் அதிரும் என்று கூறப்படுகிறது.

வேதாளம் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த தரலோக்கல் பாடலுக்கு அஜீத் செம டான்ஸ் ஆடியுள்ளதாகவும், இந்த பாடல் ‘கெத்த விடாதே உன் கெத்த விடாதே’ என்ற வரிகளுடன் தொடங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடலுக்கு நடனப்பயிற்சி அமைத்த ஷோபி மாஸ்டர் இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்வருட ஆரம்பத்தில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஏற்கனவே ‘அதாரு அதாரு உதாரு உதாரு’ பாடலுக்கு அருண்விஜய்யுடன் சேர்ந்து அபாரமாக டான்ஸ் ஆடிய அஜீத், இந்த படத்தின் தரலோக்கல் பாடலிலும் நிச்சயம் சிறப்பாக நடனம் ஆடியிருப்பார் என்பதை நம்பலாம். ஆனால் இந்த பாடலை திரையில் காண, தீபாவளி வரை பொறுத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Aniruth Tharalocal Song in Vethalam.