மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட 2 மெகாத்தொடர்கள் நவம்பர் 18 முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
ஒரு முக்கிய தொழிலதிபராக நாற்பது வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத ராம், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த முப்பது வயதான பிரியா, இந்த ஜோடிகளுக்கு இடையே திருமணத்திற்கு பிறகு உருவாகும் காதலை மையப்படுத்திய, குடும்பங்கள் கொண்டாடிய சூப்பர் ஹிட் மெகாத்தொடர் “உள்ளம் கொள்ளை போகுதடா” இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சிறுவயதிலேயே தந்தையை இழந்த தேவ், தன் தாயிடம் மிகவும் பாசமாக இருக்கிறார். இருப்பினும், தேவ் விரும்பும் பெண்ணை அவரது தாய்க்கு பிடிக்கவில்லை. மேலும் அவர் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டிய ஓர் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார். இவ்வாறாக, தாய் பாசத்திற்கும், காதலுக்கும் இடையே சிக்கி கொள்ளும் ஓர் இளைஞனின் பாசப் போராட்டத்தில் மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட “இனி எல்லாம் வசந்தமே” மெகா தொடர் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.