2,000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல் வங்கிகளில் மாற்றலாம் எனவும் அப்படி மாற்ற வங்கிகளுக்கு வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமெனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

2023ம் ஆண்டு மே 19ம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 2023ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.

அதன்படி, இன்று (23.05.2023) முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு 10 நோட்டுகள் வரை மாற்றலாம்; மேலும் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்ய எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *