முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இரண்டாவது கட்ட கலந்தாய்வின் முடிவில் 27 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2016-18-ஆம் கல்வியாண்டுக்கு முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள் நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம் ஆகியவற்றில் அரசு இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 854 மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
இவற்றுக்கான முதற்கட்ட கலந்தாய்வின் முடிவில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 89 இடங்களும், முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் 14 இடங்கள் என மொத்தம் 103 காலியிடங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இருந்து மாநில அரசுக்கு 83 முதுநிலை மருத்துவ இடங்களும், 3 முதுநிலை பல் மருத்துவ இடங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. மொத்தம் 189 இடங்களுக்கு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் ஏப்ரல் 12, 13 ஆகிய தேதிகளில் முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வின் முடிவில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 23 இடங்களும், முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளில் 4 என இடங்கள் என மொத்தம் 27 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதுதொடர்பாக தேர்வுக் குழு செயலர் செல்வராஜன் கூறியது: மாணவர் சேர்க்கையை மே 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். அதனால் நேர்காணல் நடத்தி மீதமுள்ள விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்றார்.
English Summary : 27 vacancies after 2nd stage Medical counselling.