ளஸ் 2 தேர்வு முடிவு தேர்தலுக்கு அடுத்த நாளான மே மாதம் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் மே 19-ஆம் தேதி முதல் மாணவர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் தண்.வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 17-ஆம் தேதி காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், ஆண்டைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, ww.tndge1.tn.nic.in, www.tndge2.tn.nic.in ஆகிய இணைதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 19-ஆம் தேதி முதல் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மே 21-ஆம் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary : Students can download their temporary 12th marks sheets on May 19th.