சென்னை: குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி(95) வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை மாலை 6.10 மணியளவில் மருத்துவமனையில் காலமானார்.திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில் இடையிடையே அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதன் காரணமாக முரசொலி அலுவலகம், அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்களுக்கு அவர் வருகை தந்திருந்தார்.
கடந்த ஜூன் 3-ஆம் தேதி அவரது பிறந்தநாளையொட்டி தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். இந்நிலையில் அவருக்கு சில தினங்களுக்கு முன்பு தொண்டையில் பொருத்தப்பட்ட டிரக்கியாஸ்டமி கருவி மாற்றப்பட்டது.
இதற்காக அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாலையே வீடு திரும்பினார். இருப்பினும் சிறுநீரக தொற்று காரணமாக கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது வீட்டிலேயே அனைத்து மருத்துவ உபகரணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் கடந்த வியாழக்கிழமை கருணாநிதியின் உடல்நலம் குறித்து கோபாலபுரம் சென்று, நலம் விசாரித்தனர்.
தொடர்ந்து தேசத்தின் முக்கிய தலைவர்கள் எல்லாம் கருணாநிதியை உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர்.
இந்நிலையில், அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து கடந்த 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் கருணாநிதி. ரத்த அழுத்த குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.
கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கருணாநிதிக்கு, ஆகஸ்ட் 6-ஆம் தேதி காலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்தார். இதையடுத்து மாலை வெளியான அறிக்கையில் வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவால் நிறைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு மருத்துவ உதவிகளுக்கு உடல்தரும் ஒத்துழைப்பை வைத்தே உடல்நிலை குறித்து கூற முடியும் என்று காவேரி மருத்துவமனை கூறியிருந்தது. இந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து இன்று செவ்வாய்கிழமை மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனிற்றி காலமானார்.
கருணாநிதியின் மறைவால் திமுகவினர் பெரும் சோகமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். தமிழகமே பெருமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
எழுத்து துறை, நாடகம், திரைப்பட வசன கர்த்தா என பன்முக ஆளுமை கொண்டவர் கருணாநிதி. 1957-ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் முதல் முறையாக பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி, 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்றார். மொத்தம் 13 பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ள கருணாநிதி, ஒருமுறை கூட தோற்றது கிடையாது. அமைச்சராகவும், 5 முறை முதல்வராகவும் பணியாற்றியவர் கருணாநிதி.