இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப்போட்டியில், மல்யுத்தப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
உஸ்பெகிஸ்தான் வீரர் சிராஜுதின் கசாநோவை 13-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கத்தை வென்றார் பூனியா.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் 40 விளையாட்டு போட்டிகளில் 572 பேர் பங்கேற்றுள்ளனர்.
ஜகார்த்தா விளையாட்டு மையத்தில் இன்று ஆடவருக்கான 65கிலோ ப்ரீஸ்டையில் மல்யுத்தப் போட்டி நடந்தது. இதில்
இந்தியவீரர் பஜ்ரங் பூனியாவை எதிர்த்து களமிறங்கினார்உஸ்பெகிஸ்தான் வீரர் சிராஜுதின் கசாநோவ்.
இதில் உஸ்பெகிஸ்தான் வீரர் சிராஜுதின் கசாநோவை 13-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கத்தை வென்றார் பூனியா. தங்கப்பதக்கம் வென்ற பூனியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
24வயதான பூனியா ரயில்வேதுறையில் பணியாற்றி வருகிறார். சர்வதேச அளவில் 65 கிலோ எடைப்பிரிவு ப்ரீஸ்டைல் பிரிவில் 2-ம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.