அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் நேற்று இரவு வெளியிட்டது.

முன்னதாக ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு கடந்த 16, 17-ம் தேதிகளில் நடைபெற்றது. மேலும் இவர்களுக்கான பணி நியமன ஆணை பள்ளிக் கல்வித்துறையில் இருந்து விரைவில் அனுப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

English Summary : Post graduate teacher Selection List has been announced yesterday night by Tamil Nadu Examination Board.