ரேஷனில், இனி பொருட்கள் வாங்க வேண்டுமானால், கைரேகை பதிவு கட்டாயம். அதற்கான, ‘பயோமெட்ரிக்’ பதிவு முறை, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், அக்டோபர், 15 முதல், அமலுக்கு வருகிறது.

தமிழக ரேஷன் கடைகளில், 1.87 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, மாதம், 20 கிலோ அரிசி இலவசமாகவும், துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்றவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. நான்கு உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கார்டுகளில், ஒவ்வொரு நபருக்கும், கூடுதலாக, ஐந்து கிலோ அரிசி வழங்கப்படுகிறது

அரிசிக்கு பதில், விருப்பத்திற்கு ஏற்ப, ஐந்து அல்லது, 10 கிலோ கோதுமையும் இலவசமாக வாங்கி கொள்ளலாம். இவற்றுக்காக, தமிழக அரசு, நடப்பாண்டில், 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.அரிசி கார்டு வைத்திருக்கும் பலர், ரேஷன் பொருட்களை வாங்குவதில்லை. அவர்கள், தங்கள் கார்டுகளை, வேலையாட்கள், உறவினர்களிடம் கொடுத்து, பொருட்களை வாங்கி கொள்ளும்படி கூறுகின்றனர்.

இதற்காக, 34 ஆயிரத்து, 773 ரேஷன் கடைகளுக்கு, பயோமெட்ரிக் கருவிகள் மற்றும், ‘பிரின்டர்’ சாதனங்கள் வாங்க, மே, 29ல், ‘டெண்டர்’ கோரப்பட்டது. அதில், நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. அவற்றின் தொழில்நுட்ப விபரங்களை, ஆய்வு செய்து முடித்துள்ள அதிகாரிகள், இந்த வாரத்தில், விலை குறைப்பு பேச்சு நடத்த உள்ளனர்.

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசின், ‘ஆதார்’ விபரங்கள் அடிப்படையில், 1.97 கோடி குடும்பங்களுக்கு, ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள்

வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, ஆதார் கார்டில், விரல், விழி ரேகைகள் பதிவாகியுள்ளன. இதனால், பயோமெட்ரிக் கருவியில், விரல் ரேகை பதிவு செய்ததும், அந்த விபரம், கடையில் உள்ள, ‘பாயின்ட் ஆப் சேல்’ கருவியில் தெரியும்.

இதனால், தற்போது கடைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. ஏற்கனவே, ஆகஸ்ட் மாதம் திட்ட மிடப்பட்ட, பயோமெட்ரிக் திட்டம், உறுதியாக அடுத்த மாதம், 15ல் அமல் படுத்தப்படும். இனிமேல், விரல் ரேகை பதிவு செய்தால் மட்டுமே, ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். இதனால், ரேஷன் பொருட்கள் வீணாவது தடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *