அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) காலியாக உள்ள இடங்களுக்கு 28-ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது. இது குறித்து தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாகவுள்ள இடங்களுக்கு 28 வரை நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
சேர்க்கையில் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அருகிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களைத் தொடர்பு கொண்டு பயிற்சியில் சேருமாறு தெரிவிக்கப்படுகிறது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவு விவரங்களை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) காலியாக உள்ள இடங்களுக்கு 28-ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது தங்களுக்கு அருகில் உள்ளஅரசு தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.
இது குறித்து மேலும் தகவல்கள் பெற 044-22501006 என்ற தொலைபேசி எண், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
