தனி நபர்களின் ஆதார் விவரங்கள் பிறர் வசம் செல்லாமல் அவர்கள் விவரங்களை சரிபார்க்கும் வகையிலான புதிய வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
QR CODE உள்ளிட்ட ஆஃப்லைன் முறைகளில் ஆதார் தகவல்களை சரிபார்க்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை மத்திய அரசு அனுமதித்துள்ளது. இம்முறையில் தனி நபர்களின் கருவிழி, கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களை பல்வேறு சேவை தரும் அமைப்புகள் பெற இயலாது. தனி நபர்களின் பயோமெட்ரிக் ஆதார் தகவல்களை தனியார் நிறுவனங்களை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது