ஆயுத பூஜையையொட்டி திருநெல்வேலிக்கு இயக்கப்படும் சுவிதா சிறப்பு தொடர் வண்டியில் படுக்கை வசதியுள்ள ஒரு அனுமதிச்சீட்டு ரூ.1,275 ஆகவும், 2-ம் வகுப்பு ஏசியில் ஒரு அனுமதிச்சீட்டு ரூ.5,175 ஆகவும் உயர்ந்துள்ளன. இந்த பிளக்சி கட்டண முறைகளால் சாதாரண, நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்களில் சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வகை சிறப்பு தொடர் வண்டிகளில் பிளக்சி கட்டண முறையில் அனுமதிச்சீட்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு 20 சதவீத அனுமதிச்சீட்டுகளுக்கும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது. சுவிதா சிறப்பு தொடர் வண்டி2ஏசி, 3ஏசி, படுக்கை வசதி பெட்டிகளில் தலா 20 சதவீதம் என 5 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதற்கிடையே, ஆயுதஜையை முன்னிட்டு வரும் 17, 18-ம் தேதி களில் தாம்பரம் – திருநெல் வேலிக்கு 2 சுவிதா சிறப்பு தொடர் வண்டிகள் (82617/82613) இயக்கப் படுகின்றன. திருநெல்வேலிக்கு படுக்கை வசதியுள்ள ஒரு அனுமதிச்சீட்டு ரூ.1,275, 3-ம் வகுப்பு ஏசியில் ஒரு அனுமதிச்சீட்டு ரூ.3,655, 2-ம் வகுப்பு ஏசியில் ஒரு அனுமதிச்சீட்டு ரூ.5,175 எனவும் வசூலிக்கப்பட்டன.
இந்த கட்டணங்கள் வழக்கமாக உள்ள கட்டணத்தில் இருந்து, 3 மடங்கு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, திருநெல்வேலிக்குச் செல்லும் வழக்கமான விரைவு தொடர் வண்டிகளில் படுக்கை வசதிக்கு ரூ.385 என வசூலிக்கப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் தற்போது சுவிதா சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.